'170 தொகுதிகள் வரை வெற்றிபெறும் நிலை அதிமுகவுக்கு உள்ளது'.
|
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு வரை பெறுகின்ற வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் தனியாக 140 தொகுதியிலிருந்து 170 தொகுதிகள் வரை வெற்றி பெறுகின்ற நிலையில் இந்த தேர்தல் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களும் அப்படித்தான் வாக்களித்திருப்பார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். |
|
இந்த கூட்டணியை பொறுத்தளவில் அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியாற்றி உள்ளோம். நாங்கள் மட்டுமல்ல எங்களோடு கூட்டணியில் இருக்கும் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் இன்னும் இது போன்ற பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் ஒருங்கிணைப்போடு பணியாற்றியுள்ளோம். திமுகவின் நிலைமை அப்படி அல்ல. இன்னும் சொல்லப்போனால் மோடி அவர்களும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் சேர்ந்து பல தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கடைசி வரை இழுபறியாக இருந்து வேறு வழி இல்லாமல் கூட்டணி உடன்பாடு செய்தது. அங்கு ஒருமித்த உடன்பாடு இல்லை. ஒருமித்த கருத்தும் இல்லை அவர்களுக்கு இடையே. எனவே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த நேரத்தில் கூட ஸ்டாலின் இணைந்து பிரசாரத்தில் ஒரு இடத்தில் கூட அவர்கள் பேசவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடைசி நேரத்தில் கூட்டணி சேர்ந்தாலும் தமிழகத்தினுடைய எதார்த்த நிலையை முதலமைச்சரை வைத்துக்கொண்டே மேடையில் சொல்லிவிட்டார்'' என்றார். |