
லேட்டஸ்ட் படங்களை தாக்கி பதிவிட்ட ஜோதிகா!
29.07.2025 07:06:00
நடிகை ஜோதிகா தற்போது கணவர் சூர்யாவுடம் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சூர்யா தமிழ் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து போகிறார். ஜோதிகா மும்பையில் இருப்பதால் தற்போது ஹிந்தி பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் தற்போது வெளியாகி இருக்கும் Saiyaara படத்தை பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. |
ஜோதிகா Saiyaara படத்தை பாராட்டுவது போல மற்ற படங்களை தாக்கி பதிவிட்டு இருக்கிறார். "இந்த காலத்தில் ஆக்ஷன் நிறைந்த படங்கள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உடன், ஐட்டம் பாடல்கள் உடன் வரும் நிலையில்.. இப்போது எமோஷன், இசை, மற்றும் நல்ல கதை உடன் ஒரு படம் வந்திருக்கிறது" என குறிப்பிட்டு Saiyaara படத்தை ஜோதிகா பாராட்டி இருக்கிறார். |