ஐ.எம்.எவ் பகிரங்க எச்சரிக்கை

28.09.2022 21:58:05

பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக் குறைப்பு திட்டங்களை சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாக விமர்சித்துள்ளது.

இந்த நடவடிக்கை வாழ்க்கைச் செலவு நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்யும் என நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமானது வழமைக்கு மாறாக, வெளிப்படையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் அண்மைய வரிக்குறைப்பு அறிவிப்புகளை விமர்சித்துள்ளது.

பவுண்ட் கடுமையான வீழ்ச்சி

இந்த முன்மொழிவுகள் சமத்துவமின்மையை அதிகரிக்கும் என்பதுடன், பெறுமதி ஏற்ற அழுத்தங்களுக்கும் வழி வகுக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இந்தத் திட்டங்கள் தொடர்பான எச்சரிக்கைகள் சந்தைகளில் பிரதிபலித்து வருவதுடன், பவுண்டின் பெறுமதியும் கடுமையான வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.