நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

19.01.2022 10:16:00

தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த நீதிமன்றம் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை 12 வாரங்களில் டிஎன்பிஎஸ்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பதாக கூறி மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி சுதந்திரமான அமைப்பாக இருக்கும் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியது. 

 

இதற்கு பதலளித்த தமிழக அரசு,  நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியது.

 

இதையடுத்து உச்சநீதிமன்றம், தமிழக அரசு உயரதிகாரிகள் இனி இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பை செய்யக்கூடாது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறையில் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.