
சூரியுடன் மோதும் சந்தானம்!
16.04.2025 07:02:00
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மாற்றியுள்ளது. |
தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார். இப்படம் வரும் மே 16ம் தேதி வெளிவர உள்ளது. ஏற்கனவே இதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த இரண்டு படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |