ஸ்புட்னிக்-வி பெற்றவர்களுக்கு இரண்டாவதாக பைஸர் செலுத்த ஆராய்வு!

05.09.2021 05:00:00

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் தொடர்பான தேசிய ஆலோசனை குழு இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.