இலங்கையுடன் வைரஸ் மருந்து தொடர்பான தரவுகளை பகிர்ந்துகொள்வதற்கு ரஸ்யா இணக்கம்

02.01.2021 09:48:49

 

ரஸ்யா தனது கொரோனா வைரஸ் மருந்து தொடர்பான அவசியமான தரவுகளை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு இணங்கியுள்ளது.
தனது மருந்துகள் தொடர்பாக இலங்கை மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மேலதிக பேசசுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் ரஸ்யா இணங்கியுள்ளது.

ரஸ்யாவின் சுகாதார அமைச்சிற்கும் இலங்கையின் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான இணையவழி பேச்சுவார்த்தைகளின் போதே ரஸ்யா இதனை தெரிவித்துள்ளது.