விசில் சின்னத்தால் தவெகவுக்கு உள்ள சிக்கல்.

23.01.2026 14:11:00

தவெகவிற்கு விசில் சின்னத்தை வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். கடந்த பல தேர்தல்களில் விசில் சின்னத்தை பல சுயேட்ச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. நடிகர் மயில்சாமி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கூட விசில் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி அரசியலில் இறங்குவதற்கு முன்பு ஒரு இயக்கமாக செயல்பட்ட போது கூட விசில் சின்னத்தை பயன்படுத்தியது.

தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. இதனால் தவெகவினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனெனில் விசில் என்பது ஒரு கவர்ச்சிகரமான ஒரு சின்னம்.. கோட் படத்தில் விஜய் பாடுவது போல ‘விசில் போடு’ என பிரச்சாரத்தில் பேசி வாக்குகளை சேகரிப்பார்கள்.அதேநேரம் தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்ததில் ஒரு சிக்கலும் இருக்கிறது.

தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாத தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளருக்கு விசில் சின்னத்தை ஒதுக்குவோம் என தேர்தல் அணையம் அறிவித்திருக்கிறது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டுயிட்டால் எல்லா தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட முடியும்.
ஆனால் கூட்டணி கட்சிகள் அவர்களின் சின்னத்தில் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் விசில் சின்னம் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.