இலங்கையை ஒரு போதும் தனிமையில் விட மாட்டோம்

08.11.2022 15:20:20

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்ததாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தி இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, இலங்கையை ஒரு போதும் தனிமையில் விட மாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், நெருக்கடி நிலையிலிருந்து இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.