ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதி எதிர்பாராத விதமாக இராணுவச் சட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தம் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1980 களில் இருந்து நாடு சந்தித்த மிகவும் கடுமையான சவால் இதுவென்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடனான கடும் மோதலுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார். |
மட்டுமின்றி, வட கொரிய சார்பு ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இதுவென்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் நாட்டின் சமீபத்திய வரலாற்றில் சில பதட்டமான மணிநேரங்களுக்குப் பிறகு, துருப்புக்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்புவார்கள் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து உத்தரவு நீக்கப்படும் என்றும் யூன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அதிகாலை தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி யூன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் இராணுவச் சட்டத்தை நீக்குவோம் என அவர் உறுதி அளித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த உத்தரவை நீக்குவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வடகொரியாவுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளில் 28,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் தென் கொரியாவில் முகாமிட்டுள்ள நிலையிலேயே நாட்டின் நெருக்கடி குறித்து கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள இராணுவச் சட்டமானது கைதாணை இல்லாமல் எவரையும் கைது செய்ய அனுமதிக்கிறது. மட்டுமின்றி அனைத்து ஊடகங்களும் இராணுவ அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பல தசாப்தங்களாக ஜனநாயகத்தை அனுபவித்த தென் கொரிய மக்கள், இராணுவச் சட்டத்திற்கு இணங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஜனாதிபதி யூனின் அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற இராணுவச் சட்டத்தை நிராகரித்துள்ளதாக வெளியான தகவல் கூடியிருந்த மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஜனாதிபதி யூன் தனது அரசியல் எதிரிகளை அரசுக்கு எதிரான சக்திகள் மற்றும் போலி செய்திகள் என்று முத்திரை குத்துவதில் பெயர் பெற்றவர். மே 2022ல் பொறுப்பேற்ற அவரது நிர்வாகம், பத்திரிகைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்துவதை பெருமளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |