மன்னாரில் கடும் வறட்சி!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள், தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ளது.
அதே நேரம் சிறிய குளங்கள் கால்வாய்கள் முற்றாக வறண்டு போய் உள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் மன்னார் மாந்தை பகுதியில் சிறுபோக பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் நெற் செய்கையும் கருகியுள்ளதுடன் கத்தரி,கச்சான் போன்ற தோட்ட செய்கைகளும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.
அதே நேரம் கால்நடைகளும் விலங்குகளும் குடி நீர் இன்றி இறக்கும் சம்பவங்கள் காணக்கூடியதாக உள்ளது. இன்னும் சில பகுதிகளில் வறட்சி காரணமாக கிணற்று நீரும் வற்றி உள்ளது.