எமிரேட்சில் சென்னை அணி

14.08.2021 09:21:58

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க சென்னை, மும்பை அணியினர் எமிரேட்ஸ் சென்று சேர்ந்தனர். 

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இந்தியாவில் நடந்தது. 29 போட்டிகள் மட்டும் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் செப். 19 முதல் எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடர உள்ளது. முதல் போட்டியில் தோனியின் சென்னை அணி, ரோகித் சர்மாவின் மும்பை அணியை சந்திக்கவுள்ளது. 

போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜா என மூன்று மைதானங்களில் நடக்கவுள்ளன. இதனிடையே சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ், அம்பதி ராயுடு, தீபக் சகார் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் இருந்து நேற்று எமிரேட்ஸ் கிளம்பிச் சென்றனர். பிறகு எமிரேட்ஸ் சென்றடைந்ததும், விமான நிலையத்தில் வீரர்கள் வெளியே வந்த போட்டோக்களை தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டது சென்னை அணி. அதில்,‘எமிரேட்சில் இறங்கி விட்டோம்’ என தெரிவித்து இருந்தது. இதேபோல மும்பை அணியினர் நேற்று அபுதாபி சென்று சேர்ந்தனர்.