சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

09.12.2024 09:18:51

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒரு மின்னல் முன்னேற்றத்திற்குப் பின்னர் தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்பின்றி கைப்பற்றினர்.

இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது.