பாஜக அலுவலகத்திற்கு சீல் வைப்பு..!

09.02.2024 12:53:18

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூரில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்திற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜக சார்பில் தென் சென்னை, வடசென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் சென்னையில் திறக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இடத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைப்பதாக கூறி, பாஜக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.