வரிச் சலுகைகள் வருவாயை இழக்க வழிவகுக்கும்

03.04.2024 07:54:34

2022/23 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), வரிச்சலுகைகள் மொத்தமாக 978 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியதாக அரசாங்கம் (மார்ச் 31) தெரிவித்துள்ளது.

இது 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 56% ஆகும்.

வெறிற்றே ரிசர்ச் இனால் பராமரிக்கப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான publicfinace .lk  ஆல் இது முன்னிலைப்படுத்தப்பட்டது.

இலங்கையின் நிதி அமைச்சினால் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட "வரிச் செலவின அறிக்கை " என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டு இவ் ஆய்வு வெளியிடப்பட்டள்ளது.

இலங்கை வழங்கிய பல்வேறு சிறப்பு இலக்கு வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வருவாய் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகளை இவ் ஆவணம் தெரிவிக்கிறது. "சர்வதேச சிறந்த நடை முறைகளிற்கேட்ப இலங்கையின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது" என ஆவணம் அதன் நோக்கத்தைக் கூறுகிறது.

IMF திட்டத்தில் அரையாண்டு அடிப்படையில் "முதலீட்டு வாரியம் மற்றும் SDP [மூலோபாய மேம்பாட்டு திட்டங்கள் சட்டம்] மூலம் வரிவிலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் மற்றும் வரிவிலக்கு பெருமானத்தின் மதிப்பீடுகளை" வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த வெளிப்படுத்தளைத் தொடங்குவதற்கான கடைசித் திகதி மார்ச் 2023 ஆகும். இது ஃபெப்ரவரி 2024 அன்று கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டதன்படி, "IMF ட்ராக்கர்" இனால் நிறைவேற்றப்படவில்லை என  பதிவு செய்யப்பட்டது.