தவெக அரசுக்கு எதிராக விவசாயிகள் நூதன போராட்டம்!

23.06.2026 15:03:36

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாகை மாவட்டம் அத்திபுலியூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவோடு ஏந்தியும், வாழையிலையில் மண் வைத்து தின்றும் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். மேலும், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி அரைநிர்வாணத்துடன் அவர்கள் அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    

 

இந்தப் போராட்டத்தில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.