வடக்கில் 680 பாடசாலைகள் 21ஆம் திகதி மீள ஆரம்பமாகும் - வடக்கு ஆளுநர் 

06.10.2021 09:57:21


வடமாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான 680 பாடசாலைகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்க முடியும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர்களுடனான மெய்நிகர் இணைய வழி ஊடாக இடம்பெற்ற  கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.