அஷ்வினுக்கு இடம் கிடைக்குமா

24.08.2021 14:51:46

மூன்றாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. முதல் டெஸ்டில் சேர்க்கப்படாத அஷ்வின், இம்முறை களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் நாளை லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணியின் துவக்க ஜோடி ரோகித் சர்மா (152 ரன்), லோகேஷ் ராகுல் (244) கூட்டணியில் மாற்றம் இருக்காது. ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா–ரகானே ஜோடி மீண்டு வந்தது இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கும். கேப்டன் கோஹ்லி, 2 போட்டியில் 62 ரன் தான் எடுத்துள்ளார். சதம் அடிக்க தடுமாறும் இவர், தற்போது அரைசதம் எட்டவே சிரமப்படுகிறார். அடுத்து வரும் ரிஷாப் பன்டும் (84 ரன்) பெரியளவு ரன்கள் குவிக்க முயற்சிக்க வேண்டும்.