இங்கிலாந்தில் தலைமைத்துவ நெருக்கடி !

12.12.2025 14:06:18

இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கட்சியின் இடதுசாரிகள் ஏஞ்சலா ரேனரின் சாத்தியமான தலைமைத்துவ முயற்சி குறித்துப் பிளவுபட்டுள்ளனர்.

ஒருபுறம், சில இடதுசாரி உறுப்பினர்கள் ரேனருக்கு உறுப்பினர்களிடையே உள்ள செல்வாக்கைக் காரணம் காட்டி, வருகின்றனர்.

 

மறுபுறம், மற்றவர்கள் அவரது வரி விவகாரங்கள் காரணமாக ஏற்பட்ட ராஜினாமையையும் மற்றும் அரசாங்கத்தில் இருந்தபோது இடதுசாரிகளுக்காக அவர் போதுமான அளவு பேசாததையும் சுட்டிக்காட்டி, அவரது முயற்சி பொதுமக்களிடம் எடுபடாது என்று கருதுகின்றனர்.

மேலும், பலர் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாமை ஒரு மாற்றாக விரும்புகின்றனர்.

ஏனெனில் அவர் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்பில் இல்லாதவர் மற்றும் பொதுமக்களிடையே பிரபலமானவர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மே மாத உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்து ஸ்டார்மருக்கு எதிரான தலைமைத்துவ சவால் தவிர்க்க முடியாமல் போகலாம் என்று பலர் கருதுகின்றனர்.