நாடாளுமன்றத்தில் அடுக்கடுகான குற்றச்சாட்டுக்கள் - அனல் பறந்த ரணிலின் முதல் உரை
23.06.2021 09:05:16
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே, பொருளாதார ரீதியில் நாட்டை மீள வழமைக்கு கொண்டு வருவதற்கான ஒரேயொரு வழிமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டதை அடுத்து, சபையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தேசிய கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. கொரோனா தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம், செயற்படுவது அவசியம். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. அது பாரிய தவறான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.