பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன சூரி.
|
சூரி நடித்த மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியும் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். விடுதலை, கருடன், மாமன் என தொடர் வெற்றியை தந்த சூரி, மேலும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை மண்டாடி தேடி தந்துள்ளது. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. |
|
இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், சத்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வசூல் அதிகரித்தது. திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், மண்டாடி படத்தின் தயாரிப்பு நிறுவனம், இப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சூரியின் மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியும் இதுவரை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களின் படங்களும், பாகுபலி 2, கேஜிஎப் 2, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களும் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சூரியின் மண்டாடியும் இணைந்து சாதனை படைத்துள்ளது. |