மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 219 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
17பேர் கொண்ட இந்த அணியில், 24 வயது துடுப்பாட்ட வீரரான ஹசீப் ஹமீட் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஹசீப் ஹமீட் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அவர் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 219 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அடுத்ததாக தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் பின்னர் சர்ச்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ரொபின்சன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவர் தனது நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
ஜோ ரூட் தலைமையிலான அணியில், ஜேம்ஸ் எண்டர்சன், ஜோனி பேயர்ஸ்டொவ், டொம் பெஸ், ஸ்டுவர்ட் புரோட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிரெவ்லி, சேம் கர்ரன், ஹசீப் ஹமீட், டேன் லோவ்ரன்ஸ், ஜெக் லீச். ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டோம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் ஒகஸ்ட் 4ஆம் திகதி நொட்டிங்ஹாம்- ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.