சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் என்ன தெரியுமா?

03.03.2026 08:12:00

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். எந்திரன் திரைப்படத்தை தயாரித்து தங்களது பயணத்தை தமிழ் சினிமாவில் இந்த நிறுவனம் தொடங்கியது. இதன்பின், சர்கார், பேட்ட, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் என பல திரைப்படங்களை தயாரித்தனர்.

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட்டாகி இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது. இதை தொடர்ந்து ராயன் மற்றும் கூலி ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படங்கள் என்னென்ன என்பது குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருந்து வெளிவரவிருக்கும் படம் ஜெயிலர் 2. இந்திய சினிமாவில் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் DC படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் முறையாக லோகேஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதால் இப்படத்தின் மீதும் தனி எதிர்பார்ப்பு உள்ளது.

மூன்றாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் அல்லு அர்ஜுன் - அட்லீயின் படம். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களைதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.