ரஜினி படத்தில் வாய்ப்பு!.

23.08.2026 11:00:00

திரையுலகில் நடிகர், நடன இயக்குனர் என வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இவர் நடனம் அமைத்திருக்கிறார். கமலுக்கு விக்ரம் படத்திலும், ரஜினிக்கு காலா, கூலி போன்ற படங்களிலும் இவர் நடனம் அமைத்திருக்கிறார்.
 

ஒருபக்கம் நிறைய படங்களில் இவர் நடித்தும் வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த லேகா சேப்டர் ஒன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் லியோ படத்திலும் நடித்திருந்தார். எனவே தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலைய்ல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் நடந்த பல முக்கிய விஷயங்களை சாண்டி மாஸ்டர் பகிர்ந்து வருகிறார்..

தன்னுடைய முதல் பட வாய்ப்பு பற்றி பேசிய சாண்டி மாஸ்டர் ‘ரஞ்சித் அண்ணா ஒரு பாட்டை போட்டு காட்டி ‘ரஜினி சாரோட ஓப்பனிங் இதில் ஆரம்பிக்குது.. நீதான் பண்ற’ என்று சொன்னார். ‘இது ரஜினி சாருக்கு தெரியுமா?’ என்று கேட்டேன். ‘தெரியாது.. வா பாத்துக்கலாம்’னு சொன்னார். பத்திரிகைல காலா பர்ஸ்ட் லுக் விளம்பரத்துல நடனம் சாண்டினு முதல் தடவையா வருது..

பாட்டுக்கு, டான்ஸ் க்கு நல்ல பெயர் வருது.. ரஞ்சித் சாருக்கு போன் பண்ணி அழுதேன். ‘இது உன்னோட திறமைக்கு கிடைத்த பாராட்டு’ என சொன்னார். அதேபோல் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் டான்ஸ் ஆடினதை பார்த்துட்டு லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். என்னோட ஸ்டெப்புக்கு கமல் சாரை ஆடினது பெரிய சந்தோஷம்’ என சொல்லியிருக்கிறார்