தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா?
|
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தேமுதிக இணைந்திருப்பதால் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். |
|
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம், "அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக எல்லோருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்மிடம் அதை சமாளிக்கும் நிலை உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். எல்லோரும் பயப்பட வேண்டாம். சிலிண்டர் விலை ஏற்றுவதை திரும்பப் பெற வேண்டும். குடும்ப விழா வீடு, வணிக பயன்பாடு சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோல் டீசல் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேப்டன் இந்துவாக இருந்தாலும் எங்கள் தலைமை அலுவலகத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான், கிறிஸ்துவர்களின் கிறிஸ்துமஸ், இந்துக்களின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் கேப்டன் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்று உதவி செய்து வருகிறார். பக்ரீத் தினத்தில் எல்லா தினங்களில், தான் உழைத்த சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நபிகன் நாயகத்தின் வழியை கடைபிடித்தவர் கேப்டன். இது கூட்டணி விழா இல்லை. எல்லோரும் மனம் விட்டு பேசுவதால் எங்களுக்கு இது குடும்ப விழாவாக தான் இருந்தது. கேப்டனுடன் பழகிய நாட்கள், பகிர்ந்தவர்றை மனம் விட்டு பேசும்போது மனதிற்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. குடும்ப விழாவாக இருந்து சமதர்மம், சமூக நீதி சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக மத நல்லிணக்கத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், எங்கள் கட்சி நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடி இல்லை. பத்திரிகையாளர்கள் தான் நெருக்கடியில் உள்ளனர். எல்லா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் இங்கு வந்துள்ளனர். எல்லோரும் மனம் விட்டு பேசியுள்ளனர். நீங்கள் கேட்பதை போல யாரும் இங்கு வைக்கவில்லை. எல்லோரும் இந்தக் கூட்டணியை சந்தோஷத்துடன் ஏற்றுள்ளனர். ஸ்டாலின் அண்ணன் தலைமையில் இந்தக் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். விரைவில் குழு திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளன. தற்போது ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேசி வருகிறார்கள். அது முடிந்தவுடன் தேமுதிகவை அழைத்து அண்ணன் ஸ்டாலின் எத்தனை சீட், எத்தனை தொகுதி என்பதை உறுதிபடுத்துவார். தேமுதிக பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்பட்டு எங்கள் கோரிக்கையை எடுத்து சொல்வோம்" என்றார். |