மக்கள் மனதை வென்று ஆட்சி செய்ய வேண்டும்
நாட்டை வழி நடத்த தெரியாமல் வன்முறை மூலம் மக்களை அடக்கி, பிணங்களின் மேல் நின்று, இரத்த ஆற்றில் ஆட்சி செய்ய சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்கின்றது என அனுரகுமார திசாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாம் தேர்தலை நடாத்தக் கோருகின்றோம். ஆனால், நீங்கள் பிணங்களின் மேல் நின்று, இரத்த ஆற்றில் ஆட்சி செய்ய முயற்சி செய்கிறீர்கள்.
மக்கள் மனதை வென்று ஆட்சி செய்ய வேண்டும்
மேலும் மக்களின் மனதை வென்று ஆட்சி செய்ய வேண்டும். அதைவிடுத்து நாளுக்கு நாள் வர்த்தமானி வெளியிடுதல், அதை மாற்றுதல், விலைகளை அதிகரித்தல் இதைத் தான் இந்த அரசாங்கம் செய்கிறது.
தற்போது நாட்டில் திடமான திட்டம், முறைமை இல்லை. உள்ளூர் உற்பத்தியாளர்களை கைகழுவி விட்டு, சீனாவுக்கு இங்கே சந்தை அமைத்துக் கொடுக்கின்றனர்” எனவும் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.