தாராபுரத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!.
2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் அந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். எனவே அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்தது. ஏற்கனவே அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அதே வேட்பாளர்கள் இரண்டு பேரும் இடைத்தேர்தலில் தவெக சார்பாக விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டனர்.
Gynaecoloog: onthult waarom senioren kracht in hun benen verliezen–en de simpele oplossing
இந்நிலையில், தாராபுரம் தொகுதிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.
திருப்பூர்: காவிரியை ஆதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1439 கோடியில் செயல்படுத்தப்படும்.
தாராபுரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு 2700 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்..
பாசன கால்வாய்களில் மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்
தாராபுரம் ரூ 6 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்..
மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்
தாராபுரம் நகராட்சியில் ரூ. 6 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்படும். ரூ.40 லட்சம் செலவில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
தாராபுரம் தொகுதியில் 221 கிலோமீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் கால்வாய் தூர் வாரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்..
