T-20போட்டி இன்று : மழையால் போட்டி இரத்தாக வாய்ப்பு

25.07.2021 11:47:30

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த போட்டி மழையால் இரத்தாக வாய்ப்பும் காணப்படுகின்றது.

இந்திய அணியில் இதற்கு முன்பு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடாத பல இளம் வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ள நிலையில் இருபதுக்கு 20 தொடரையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரேமதாச மைதானத்தில் இதுவரை இந்தியா மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளை குவித்துள்ளதுடன் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

இந்த மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றி பெற்றுள்ளதுடன் 1 போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.