பஸ் விபத்தில் 45 பேர் பலி

24.11.2021 13:10:55

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயணியருடன் சென்ற பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பல்கேரிய பிரதமர் ஸ்டீபன் யானவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.