ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்றம் வளாகம்.

03.09.2026 15:17:20

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய் தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்டப்படும் என தெரிவித்துள்ளார். இதில் பேசிய அவர், "சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.

   

தில், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.