சீனாவில் கொவிட் தீவிரம்: வூஹான் மக்களுக்கு கொவிட் பரிசோதனை!

04.08.2021 04:00:00

சீனாவின் வூஹான் நகரில் வசிக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

கடந்த 10 நாட்களில் 300க்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது சீனாவில் கடும் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வூஹானிலும் தொற்றுறுதியானவர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் சகலருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து தற்போது வரையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.