10 நாட்களாக காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு!

15.07.2023 18:45:51

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 10 நாட்களாக காணாமல் போயிருந்த ஒருவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வாவிக்கரையில் உருகுலைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 05ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயிருந்ததாக அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

உயிரிழந்தவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், நோய் குணமாகாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.