வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தயார் -துறைமுக தொழிற்சங்கம்

27.01.2021 08:54:15

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நட வடிக்கையினை முன்னெடுக்க தயார் என துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் எதிர்வரும் வெள்ளிக் கிழமை முதல் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் துறைமுக தொழிற்சங்கம் தீர்மானித் துள்ளது.

நேற்றைய தினம் கிழக்கு முனையத்தைப் பாதுகாப் பதற்கான தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் இந்த தீர் மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை துறை முக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரி வித்துள்ளார்.