கனிமொழியைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை!

07.07.2026 15:23:00

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் சென்னையில் உள்ள சி ஐ டி நகரில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தீர்வு என்னும் பெயரில் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளுகின்ற சதி நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.