வத்தளையில் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது
28.10.2021 06:01:36
வத்தளை, மாபொல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு உதவாத 5,921 கிலோ கிராம் எடையுள்ள கழிவு தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைதான நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
இந் நிலையில் அவர் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.