முக்கிய தடை நீக்கம் - அரசுக்கு ஏற்பட்ட தோல்வி !

24.11.2021 10:38:22

இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் தனியார் துறையினருக்கு இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.