அகதிகளின் பிள்ளைகள் நாடற்றவர்களாக மாறும் ஆபத்து!
23.07.2026 15:37:34
|
இந்தியாவில் பிறக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகள் நாடற்றவர்களாக மாறும் ஆபத்து காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று (23) வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார். |
|
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஊடாக அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்காக விசேட நடமாடும் சேவையொன்றை வெளிவிவகார அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். |