வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்
20.05.2021 09:33:37
வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவல்குளத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்று நோயால் இன்று(வியாழக்கிழமை) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்மணி சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்துடன் வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.