இசையமைப்பாளராக மாறிய இயக்குனர்

17.06.2022 08:58:54

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மிக பரபரப்பாக பேசப்பட்டு வெளியான படம் ஒரு அடார் லவ்.. காரணம் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தனது கண் சிமிட்டல்கள் மூலம் 'புருவ அழகி' என பெயரெடுத்த பிரியா பிரகாஷ் வாரியர் மூலமாக அவர் மட்டுமல்லாமல், அந்த படமும், இந்த படத்தின் இயக்குனர் ஒமர் லுலுவும் இன்னும் பலரும் பிரபலமானார்கள். இதையடுத்து பிரபல மலையாள வில்லன் நடிகரான பாபு ஆண்டனியை கதாநாயகனாக்கி பவர் ஸ்டார் என்கிற படத்தை இயக்கினார் ஒமர் லுலு.

இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது தனது புதிய படத்தை துவங்கியுள்ள ஒமர் லுலு படத்திற்கு நல்ல சமயம் என டைட்டில் வைத்துள்ளார். அடார் லவ் படத்தை போல இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்களை வைத்தே படத்தை இயக்கும் ஒமர் லுலு, இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். வழக்கமாக மற்றவர்களை போல பூஜையுடன் இந்தப்படத்தை துவங்காமல், நேரடியாக தனது இசையில் முதல் பாடலை பதிவு செய்து துவக்கியுள்ளார் ஒமர் லுலு.