ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் இந்தியா, சீனாவிற்கு ஆதரவாக ஜப்பான்!

18.09.2025 15:16:53

ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் இந்தியா மற்றும் சீனாவிற்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்த்து, இந்தியா மற்றும் சீனாவின் நிலைப்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜப்பானின் நிதியமைச்சர் Katsunobu Kato, "உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குள் ஜப்பான் செயல்படுகிறது. எந்த ஒரு நாட்டின் மீது தனிப்பட்ட முறையில் 50 சதவீதம் வரி விதிப்பது சாத்தியமில்லை" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, G7 கூட்டத்தில் சீனா மற்றும் இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால், ஜப்பான், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் LNG இறக்குமதி செய்கிறது.

குறிப்பாக, Sakhalin-2 திட்டம் ஜப்பானின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முக்கியமானதாக உள்ளது. இந்த இறக்குமதிகள் மேற்கத்திய தடைகளுக்கு உட்பட்டவை அல்ல.

ஜப்பான், G7 நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது எந்த வகையான அழுத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பரிசீலித்து வருகிறது. புதிய தடைகள் தொடர்பான உரை இரண்டு வாரங்களில் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா மீது secondary tariffs மற்றும் வர்த்தக கட்டுப்ப்பாடுகள் மூலம் ரஷ்ய எரிசக்தி வர்த்தகத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதேசமயம், NATO நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளன. ஆனால், ஹங்கேரி போன்ற சில நாடுகள் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய தடைகளை எதிர்த்துவருகின்றன.

இந்த சூழ்நிலையில், ஜப்பானின் நிலைப்பாடு, உலக அரசியல் மற்றும் வர்த்தக ஒழுங்குமுறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.