அநுர அரசாங்கம் நீண்டகாலம் பதவியில் இருக்காது!
|
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பணியை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸூம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகரவும் சிறந்த முறையில் நிறைவேற்றுகிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீண்ட காலம் பதவியில் இருக்காது என்பதை இவ்விருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இவ்விருவரும் பதிலளிக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
|
|
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே நாட்டுக்காக போராடியவர். நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.இந்த அரசாங்கம் இராணுவத்தினருக்கும், ஒற்றையாட்சிக்கும் எதிராகவே செயற்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. ஆனால் விசாரணைகள் சித்திரவதையாக அமைய கூடாது என்று குறிப்பிடுகிறோம். அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுரேஸ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் பணியை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸூம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சானி அபேசேகரவும் சிறந்த முறையில் நிறைவேற்றுகிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதிக காலம் ஆட்சியில் இருக்காது என்பதை சானி அபேசேகர, திலிப பீரிஸ் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இவ்விருவரும் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார். |