
இந்தியக் கடற்படைக்கு 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்!
இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படைக்கு 9 நவீன நீர்மூழ்கி கப்பல்களை (submarines) சேர்க்கும் திட்டம் Project 75 (India) அல்லது P75(I) என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் ரூ.90,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6 கப்பல்கள் ஒப்பந்தமாக கையெழுத்தாக உள்ள நிலையில், மேலும் 3 கப்பல்கள் முக்கிய ஒப்பந்தத்தின் ஒரு வருடத்துக்குப் பிறகு சேர்க்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
இந்த நடவடிக்கை சீனாவின் இந்திய பெருங்கடலில் வளரும் கடற்படை தாக்கம் மற்றும் பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் விரிவாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்: Air-Independent Propulsion (AIP) தொழில்நுட்பம்: மிக குறைந்த சத்தத்தில் நீருக்கடியில் நீண்ட நேரம் இருக்க உதவும். டிசைன் மற்றும் தொழில்நுட்ப அறிவின் மாற்றம், உள்நாட்டு ஆபரேஷன்கள், ஐரோப்பிய மற்றும் இந்திய செலவுகளில் ஏற்பட்ட பணவீக்கங்கள் ஆகியவை செலவினத்தை உயர்த்துகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் Mazagon Dock மற்றும் ஜேர்மனியின் ThyssenKrupp Marine Systems மட்டுமே தகுதி பெற்றுள்ளன. இது பிரான்ஸ் (Scorpene திட்டம்) இருந்து ஜேர்மனிக்கு கடற்படை கூட்டாண்மை மாறும் முக்கிய மாற்றமாகும். முன்னர் திட்டமிடப்பட்ட மேலும் 3 Kalvari வகை Scorpene கப்பல்களுக்கு தற்போது எந்த புதிய ஒப்பந்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. |