கொழும்பு மின்சார சபைக்கு முன்பாக ஊழியர்கள் போராட்டம்!

07.02.2024 15:18:11

கொழும்பில் அமைந்துள்ள மின்சார சபைக்கு முன்பாக இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

62 மின்சார சபை ஊழியர்களை பணிநீக்கம் செய்தமை சில அதிகாரிகளை பலவந்தமாக இடமாற்றம் செய்தமை, மின்பட்டியலில் விலைகள் அதிகரிக்கப்பட்டமை, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இந்த போராட்டம் இடம்பெற்றது.

மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் வலியுறுத்தினர்.

பதாகைகளை ஏந்தியும், கோஷமெழுப்பியும் போராட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பினை இதன்போது வெளிப்படுத்தியிருந்தனர்.