அர்ச்சுனா எம்.பி அதிரடி அறிவிப்பு.

20.08.2026 15:13:00

''இதுவே எனது இறுதி பாராளுமன்ற உரையாக இருக்கலாம்'' என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.

 

இன்றையதினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலம் காலமாக இருந்துவந்த இனவாத அரசாங்கங்கள் அடக்கு முறையையும் இன அழிப்பையும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

தற்போது பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரனையை கோரிய அர்ச்சுனா எம்.பி, இதுவே தனது இறுதி உரையாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், 

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்று சுதந்திரமடையாத இரண்டு இனங்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றன. இனத்தால் வேறுபட்டாலும் அவை மொழியால் ஒன்று பட்டவை. ஆனால், இரண்டு இனத்தையும் வேறுபடுத்தி ஆண்டு வருதே பெரும்பான்மை இனத்தின் பலமாக இருந்து வருகின்றது. 

காலம் காலமாக இருந்துவந்த இனவாத அரசாங்கங்கள் அடக்கு முறையையும் இன அழிப்பையும் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த இரண்டு இனங்களையும் வேறுபிரித்து ஆழ்வது தான் பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாக இருக்கின்றது. 

இதனடிப்டையில், தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காண்பது மற்றும் முஸ்லிம் இனங்கள் பாதுகாக்கப்படுவதும் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என்று கூறினார்.