உதயநிதி கைது.

04.08.2026 14:19:25

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு அருகே உள்ள 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 1 மணியுடன் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் இன்று நீலாங்கரை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    

 

அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் வேனில் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படுகிறார். உதயநிதி கைதை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அது போல் உதயநிதி செல்லும் வழியிலும் திமுகவினர் கூடி மறியல் நடத்துவதால் கிட்டதட்ட 7 மணி நேரத்திற்கு மேலாக உதயநிதி, போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார். ஆங்காங்கே திமுகவினர் போராட்டம் செய்வதால் வேன் தஞ்சைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு அச்சரப்பாக்கத்தில் உதயநிதி சென்று கொண்டிருந்த போது போலீஸ் வாகனத்தை வழிமறித்த திமுகவினர், அவருக்கு உணவு தந்தனர். ஆனால் அதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்டவருக்கு வெளியே இருந்து சாப்பாடு கொடுக்கக் கூடாது என தெரிவித்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தை அடுத்த ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு போலீஸாரே உணவு வாங்கி கொடுத்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு உதயநிதி சென்ற போலீஸ் வாகனம் புறப்பட்டது.

இதையடுத்து கள்ளக்குறிச்சியை அவரது வாகனம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் காரை வழிமறித்தனர். பிறகு போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். உதயநிதி கைதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விசாரணைக்காக தஞ்சாவூருக்கு உதயநிதி அழைத்து செல்லப்படுவதால் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தை சுற்றியுள்ள 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவர்கள் 1 மணியுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்