உதைபந்தாட்ட சம்மேளனத்தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி !
01.07.2021 10:08:43
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது.
குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ. நாகராஜன் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முக்கிய பதவிக்கு வவுனியாவில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.