
உக்ரைன் 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை.
ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை ஜூன் 2ம் திகதி நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை ஜூன் 2ஆம் திகதி நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கான இடமாக துருக்கியின் இஸ்தான்புல் நகரை ரஷ்யா பரிந்துரைத்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். |
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையேயான முந்தைய நேரடிப் பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் நடந்தன. ரஷ்யாவின் இந்த புதிய முன்மொழிவுக்கு உக்ரைன் இதுவரை பகிரங்கமாக எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்த முன்மொழிவு குறித்து மேலும் விளக்கமளித்த ரஷ்யாவின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி, சாத்தியமான தீர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்வதற்காக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா ஒரு திகதியையும் இடத்தையும் முன்வைத்துள்ளதாகக் கூறினார். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் உடன் அண்மையில் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்திய மெடின்ஸ்கி, ரஷ்யாவின் இந்த முன்மொழிவுக்கு உக்ரைனிடமிருந்து விரைவான பதிலுக்காகக் காத்திருப்பதாக வலியுறுத்தினார். |