
அரசியலில் இறங்க தயாராகும் தனுஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை தனுஷ் தற்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினிகாந்தும், விஜய்யும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.
அவ்வாறே தனுசும் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி, தனுஷ் ரசிகர்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று, சென்னை, சாலிகிராமத்தில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
எதிர்வரும் எதிர்வரும், ஜூலை 27ம் திகதி முதல் தொடர்ந்து 25 ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கு தனுஷ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனியாக கலையரங்கம் ஒன்றையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ரஜினி வழியை பின்பற்றி இருக்கும் தனுஷ், அதேபோல விஜய் வழியில் அரசியலில் இறங்குவாரா? என்பது குறித்து கேள்வி எழும்பி வரும் நிலையில் இது தொடர்பில் விரைவில் தெரிய வரும் என்றும் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தனுஷ் வெளியிட இருக்கிறார் என்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.