தெரியாமல் பவுண்டரி அடித்த வீரர் !

01.07.2022 11:29:23

காலே டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் அடித்த வித்தியாசமான பவுண்டரியை பார்த்து இலங்கை வீரர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பு 313 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 77 ஓட்டங்கள் எடுத்தார்.

முன்னதாக அவர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். அவர் வேகமாக பேட்டை சுழற்றியதால் பந்து தாமதமாக பேட்டின் பின்புறம் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

இதனை விக்கெட் கீப்பர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனது கைக்கு தான் பந்து வரும் என்று அவர் யூகித்த நிலையில் எதிர் திசையில் பந்து சென்றுவிட்டது. துடுப்பாட்ட வீரர் கிரீனே இதனை எதிர்பார்க்கவில்லை.