இலங்கை உட்பட 03 நாடுகளுக்கான பயணத்தடையை மேலும் நீடிப்பு

13.07.2021 10:45:12

 இலங்கை உட்பட 3 நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் நீடித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி வரை இந்த பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக  இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகள் 21 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடை ஐக்கிய அரபு அமீரக பிரஜைகள், ஐக்கிய அரபு எமிரேட் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பொருந்தாது எனவும் குரிப்பிடப்பட்டுள்ளது.